Gallup Global Emotions 2022 என்னும் அறிக்கை வெளிவந்திருக்கிறது. கேலப் என்னும் நிறுவனம் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேரிடம் தொடர்பு கொண்டு, உலக அளவில் உணர்வுகளின் வெளிப்படுத்தல் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் ஆண்களை விட பெண்கள் கோபம் அதிகரித்திருக்கிறது என்று கூறுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. உலக அளவில் பெண்கள் கோபப்படும் விகிதம் 25 விழுக்காட்டிற்கு மேல் என்றால் (ஆண்கள் 20%), இது இந்தியாவில் அது 40.6 விழுக்காடு. ஆண்கள் 27.8 விழுக்காடு.
ஆண்கள்தான் அதிகம் கோபித்துக் கொள்கிறார்கள் என்பது இங்கே பொய் என்று நிரூபணமாகிறது. ஆண்களைப் போன்று பெண்களும் உடல் வலிமையைப் பெற்றால், குடும்பங்களில் கணவர்களை பெண்கள் அடிக்கும் வழக்கம் வரும் புரட்சி வரும் (மகிழ்ச்சியே).
காரணங்கள்:
1. படித்து, வேலையில் சேர்ந்து, சுதந்திரமாக மாறுவதற்காகப் பெண்கள் எத்தனிக்கையில் புழக்கத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தின் மனநிலைகள் பெண்களைப் பாதிக்கின்றன.
2. வேலைப்பழுவின் தாக்கத்தை, நண்பர்களுடன் ஆண்கள் டீ கடைகளிலும் வேறு விதங்களிலும் இறக்கி வைக்க மாலையில் வீட்டிலிருந்து நழுவும் போது, பெண்கள் சமையலில் மூழ்கி பெரும் சுமை சுமக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தில், மாலையில் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும் பெண்கள் இரயிலில் இருந்து காய்கனிகளை நறுக்குவதைப் பார்க்க முடியுமாம். ஆண் என்ன செய்து கொண்டிருப்பார்.
குடும்ப பாரங்கள் ஆணும் பெண்ணும் இணையாக சுமக்கட்டும். பெண்களின் கோபம் தணியட்டும்.
0 கருத்துகள்