தேவையில்லாத மனிதர்கள் | அ. சந்தோஷ்

சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் தொடங்கி இத்தோடு இரண்டு மாதங்கள் முடிவடைந்து விட்டன. சந்தை முழுவதும் நவீனமாக்கப்பட்டு விட்டது. அதன் தொடக்க விழா முடிவடைந்து ஒருவாரமாகிவிட்டது. இன்னும் போராட்டம் முடிவடைந்தபாடில்லை. நகராட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் எப்பயனும் அளிக்கவில்லை. ஒவ்வொரு கடைகளுக்கும் நவீனமாக்கப்பட்ட சரக்கு இறக்குத் தளங்கள் அமைப்பட்டு தொழில் இயல்பாய் நடக்க ஆரம்பித்திருந்தது. பெரும்பாலும் இயந்திரங்கள் தான் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தன. மேலும் கடைகளில் வேலை செய்யும் ஓரிரு தொழிலாளர்கள் இயந்திரங்களை இயக்க உதவினர். அவர்கள் ஒவ்வொருவரும், அடையாள அட்டையுடன் கூடிய நவீன சீருடை அணிந்திருந்தனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் தேவை இனி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

போராட்டம் தொடங்கிய, முதல் வாரம் நிறைய பேர் அவர்களைப் பற்றி பத்திரிகைகளில் எழுதினார்கள், தொலைக்காட்சிளும் பொதுவெளியில் அவற்றை காட்சிப்படுத்தின. பலர் சமூக ஊடகங்களில் போட்டோக்க்கள் பகிர்ந்தனர். அவற்றுள் பெரும்பான்மையானவை செல்ஃபிக்களாவே இருந்தன. இரண்டாவது வாரம், அது குறைந்தது. போராட்டத்தில் பங்குப்பெற்றோர் 175 பேரிலிருந்து 75 ஆக குறைந்துவிட்டனர். சிலர் நோய்வாய்ப்பட்டனர், சிலரை பிள்ளைகள் வந்து அழைத்துச் சென்றனர். சில பெண்களும் தாங்கள் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுவதாக கூறி சிலரை அழைத்துச் சென்றனர். இப்போது 59 பேர் இருந்தார்கள். சாகும் வரை போராட்டம் என்று கூறி...

இப்போது, மக்கள் வசதியாக பொருட்களை வாங்கிச் சென்றனர். ஏதோ பைத்தியக்காரக் கூட்டம் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மட்டும் தான் உள்ளுக்குள் நினைத்தார்கள்.

இந்த 59 பேரும் இனித் தேவையில்லை தான்... அவர்களின் அன்றாடம் காய்ச்சிக் குடும்பங்களும்... எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.

இதுபோல இனி தேவையில்லாத மனிதர்கள் அதிகரிப்பார்களோ... காலம் கோரமுகத்துடன் சிரிக்கத் தொடங்கி இருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்