சுமையாகும் அப்பாவின் அன்பிற்குரியப் பெண்கள் | அ. சந்தோஷ

ஒருமுறை, இளங்கலை படிப்பை முடித்த மாணவி ஒருவர் என்னோடு உரையாடிக்கொண்டிருந்தாள்.



அவள் தன்னுடைய உரையாடலினிடையே தன்னைப் பெரிதும் பாதித்த நிகழ்வை விவரிப்பதாகக் கூறி, ஆரம்பித்தாள். எங்க அப்பாவுக்கு நான் செல்லப்பிள்ளை. நான் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவார். திருமணமாகி ஐந்து வருடம் கடந்து பிறந்தேன் நான். அதனால நிறையவே பாசம் தந்தார். கூலித்தொழில் செய்யும் அப்பாவுக்கு என்ன ரொம்பப் பிடிக்கும். என்னை அவ்வளவு செல்லமாகப் பார்த்தார். எனக்குத் திருமண வயதிற்கான பருவம் எட்டி விட்டது என ஆதங்கப்பட்ட அவர் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார். பலர் வந்து பார்த்துப் போயினர். சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை, பிடித்தவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் பணம் போதவில்லை என மறுப்புச் சொன்னார்கள். இதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒருநாள், அப்பா, கடவுள் படத்தின் முன் நின்றவாறு, கடவுளே இந்தப் பாரத்த இறக்கி வைக்க ஏதாவது ஒரு வழி காட்டித்தாஎன்று செபிப்பதை என் காதுகளால் கேட்டேன். நான் உடைந்துப் போய் விட்டேன். இதுவரை அப்பாவின் செல்லப்பிள்ளையாக இருந்த நான் எப்போது பாரமாகி விட்டேன் என்னும் கேள்வி என்னை விட்டு அகன்ற பாடில்லை.  

சமூகம்தான் பதில் சொல்ல வேண்டும், கூலித்தொழில் செய்யும் ஏழை அப்பா அல்ல...

கருத்துரையிடுக

0 கருத்துகள்