2022, நவம்பர் 9 ஆம் தேதி பத்தாம் பக்கத்தில் தி இந்து (டெல்லி பதிப்பு) வெளியிட்ட செய்திக்கும், 2023 ஜனவரி 02 ஆம் தேதி அதே பத்தாம் பக்கத்தில் வெளிவந்த செய்தியும் நெருங்கிப் பின்னிப் பிணைந்துக் கிடக்கின்றன. இந்துப் பத்திரிகை சில வேளைகளில் தீர்க்கத்தரிசி போல செயல்படுகிறது. 2023 ஜனவரியில் நடக்க இருப்பதை அவர்கள் 2022 நவம்பர் 9 ஆம் தேதியே கண்டறிந்து கூறிவிட்டார்கள் போலும்.
தலித் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிற சமய தலித்துக்களுக்கு அளிக்கும் இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்னும், கோரிக்கை மீதான விசாரணையின் பகுதியாக, இந்திய நடுவண் அரசு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், intelligible differentia என்னும் அர்த்த்தில், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும், வெளிநாட்டு உள்ளீடுகளை தங்களிடையேக் கொண்டிருக்கிறார்கள் என்னும் வாதத்தை முன் வைத்திருக்கிறது. இதை அறிவு வாதம் என்று சொல்லலாம். இச்செய்தியானது 2022, நவம்பர் 9 ஆம் தேதி வெளிவந்தது. 2023, ஜனவரி 02 ஆம் தேதி பத்திரிகையானது, கிறிஸ்தவர்கள் வெளிநாட்டவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள் என்னும் செய்தியை சுமந்து வந்துள்ளது. எதிரிகளைக் கட்டமைத்துவிட, அவர்கள் வெளிநாட்டவர்கள் என்னும் முத்திரைப் போதுமானது என்று நினைக்கிறேன். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டுமோ? தெரியாது. தெரிந்தாலும் குழப்பம் பிடித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாது.
மனிதரை விலங்குகளிலிருந்து வேறுப்படுத்துவது என்ன என்றால், ஆறாம் அறிவு என்பார்கள். அதுபோல, இந்தியாவில் பிறந்து வளர்ந்த, மக்கள், வெளிநாட்டில் பிறந்த மதத்தைப் பின்பற்றுவதால் அவர்களுக்கு உரிமைகள் குறைந்துப் போகின்றனவாம்.
கவனமாக இருங்கள். இத்தாலிய மார்பிள் வீட்டில் போட்டிருப்பவர்கள், நாளை, அரை ... , அரை இந்தியன் என்று சொல்லப்படலாம். பாதி வீட்டை நீங்கள் வேறொருவரோடு பகிர்ந்துக் கொள்ள நேரிடலாம். அப்படிப்பட்டதொரு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம். அதை எதிர்த்து யாராவது வாதிட்டால், அரசே மக்கள் பணத்தில், (இத்தாலிய மார்பில் வாங்குவதற்காக வட்டி கட்டினீர்கள் அல்லவா அதே பணத்தில்) வாதிட்டு, உங்கள் வீட்டைப் பிரித்தெடுக்கலாம். நீங்கள், செருப்பு, உடை, வெளிநாட்டு மணம் பரப்பும் நறுமணச்சிமிழ், வெளிநாட்டு கைக்கடிகாரம் என வாங்கிப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் கவனமாக இருக்கவும். காலம் வருகிறது, நீங்கள் பயன்படுத்திய பொருள் கொண்டுள்ள உள்ளீடுகள், உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றத்திற்காக நீங்கள் வெளிநாட்டவர்கள் என முத்திரைக் குத்தப்படலாம்.
ஆங்கிலப் புத்தகங்களை முற்றிலுமாகத் தவிர்க்கத் தொடங்குங்கள். ஏன், தமிழ் கூட இனிப் படிக்கலமா எனத் தெரியவில்லை. ஒருவேளை தமிழ் வெளிநாட்டு மொழி என சரித்திரம் திருத்தி எழுதப்படலாம்.
எங்கெங்கோ முடிச்சுகள் போடப்படுகின்றன. முன்னர் கேட்டிருக்கோம், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டார்களாம். சாத்தியம் அது முற்றிலும் சாத்தியம்.
Abhinay Lakshman, Centre alludes to ‘foreign origins’ in its affidavit on Dalit Christians, Muslims, The Hindu, 9/11/2022, 10.
"Several injured in attacks on Christians in Chhattisgarh," The Hindu, 02.01.2023, p. 10.
0 கருத்துகள்