கனிந்தருள்வாய் என் இயேசுவே | அ. சந்தோஷ்

கனிந்தருள்வாய் என் இயேசுவே
அன்புருவாம் என் இயேசுவே
கனிந்தருளவாய் என் இயேசுவே
அன்புருவாம் என் இயேசுவே
திருஇருதய பரிவன்பின் இயேசுவே
திருஇருதய பரிவன்பின் இயேசுவே
உள்ளுருகி வேண்டிடும் உம் மக்களில்
கனிந்தருள்வாய் இயேசுவே
கனிந்தருள்வாய் இயேசுவே



மலைகளை நோக்கியே கண்களை உயர்த்தினேன்
எங்கிருந்து எனக்கு உதவி வரும்
ஆ... ஆ...
மலைகளை நோக்கியே கண்களை உயர்த்தினேன்
எங்கிருந்து எனக்கு உதவி வரும்
ஏங்கியே வேண்டினேன் கதறி அழுதேன்
எங்கிருந்து எனக்கு உதவி வரும்
கல்வாரி மலையில சிலுவையில் தொங்கிடும்
என் உயிர் இயேசுவின் திரு இதயத்தில் இருந்தே
உதவி வரும் வாழ்வு வரும் வாழ்வு வரும்

கனிந்தருள்வாய் என் இயேசுவே
கனிந்தருள்வாய் என் இயேசுவே

பாவத்தின் பிடியில் சிக்கியே தவிக்கிறேன்
விடுதலை எனக்கு யார் தருவார்
ஆ... ஆ...
பாவத்தின் பிடியில் சிக்கியே தவிக்கிறேன்
விடுதலை எனக்கு யார் தருவார்
ஆன்மா இழந்தேன் வாழ்வை இழந்தேன்
புத்துயிர் எனக்கு யார் தருவார்
சீயோன் அறையில் குருதியும் உடலும்
தந்த என் இயேசுவின் திருவிருந்தாகும்
உடலும் பானமும் விடிவு வரும் புத்துயிர் தரும்

கனிந்தருள்வாய் என் இயேசுவே
கனிந்தருள்வாய் என் இயேசுவே

கனிந்தருள்வாய் என் இயேசுவே
அன்புருவாம் என் இயேசுவே
கனிந்தருள்வாய் என் இயேசுவே
அன்புருவாம் என் இயேசுவே
திருஇருதய பரிவன்பின் இயேசுவே
திருஇருதய பரிவன்பின் இயேசுவே
உள்ளுருகி வேண்டிடும் உம் மக்களில்
கனிந்தருள்வாய் இயேசுவே
கனிந்தருள்வாய் இயேசுவே

கருத்துரையிடுக

0 கருத்துகள்