ஆற்றலாய் வருவாய் ஆவியாம் இறைவா
அச்சம் அகற்றி தீமையை வென்றிட ஆற்றலாய் வருவாயே
துணையாய் இருப்பாய் உறவின் ஊற்றே
உறவைப் பேணி உயிரைக் காத்திட ஆற்றலாய் வருவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
திருச்சபை தோன்றிட ஆற்றலாய் வந்தவரே
திருச்சபை வளர்த்திட அருளினைப் பொழிவாயே
திருச்சபை தோன்றிட ஆற்றலாய் வந்தவரே
திருச்சபை வளர்த்திட அருளினைப் பொழிவாயே
அன்பும் பணிவும் வாழ்வினில் கொண்டிட
ஆற்றலைத் தந்து சாட்சியாய் மாற்ற வா
அன்பும் பணிவும் வாழ்வினில் கொண்டிட
ஆற்றலைத் தந்து சாட்சியாய் மாற்ற வா
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
விவிலிய வாக்கியம் வாழ்வினில்
சுடர்ந்திடவே
பேரொளிச் சுடரே பாதையில் ஒளிர்வாயே
விவிலிய வாக்கியம் வாழ்வினில் சுடர்ந்திடவே
பேரொளிச் சுடரே பாதையில் ஒளிர்வாயே
இறைவனை வேண்டியே தீங்கினை ஒழிக்க
அருட்பெரும் சுடரே நெஞ்சுரம் தருவாயே
இறைவனை வேண்டியே தீங்கினை ஒழிக்க
அருட்பெரும் சுடரே நெஞ்சுரம் தருவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
ஆற்றலாய் வருவாய் ஆவியாம் இறைவா
அச்சம் அகற்றி தீமையை வென்றிட ஆற்றலாய் வருவாயே
துணையாய் இருப்பாய் உறவின் ஊற்றே
உறவைப் பேணி உயிரைக் காத்திட ஆற்றலாய் வருவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
நெருப்பாய் எழுவாயே ஒளியாம் ஆவியே
இயேசுவில் வாழ்ந்து உலகினில் ஒளிரவே
நெருப்பாய் எழுவாயே
0 கருத்துகள்