மணம் வீசும் அறைக்குள் துர்நாற்றம் | அ. சந்தோஷ்

 8.30 மணிக்கு அந்த மனிதர் அந்த சாலையை தனது இரு சக்கர வாகனத்தில் கடந்து செல்வார். அந்த இடத்தைக் கடக்கும் போது, வண்டியை நிறுத்தாமல் ஒரு பை நிறைய குப்பையை தூக்கி அங்கே வீசுவார். மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் போது அந்த இடத்தைக் கடக்கையில் மூக்கை கைக்குட்டையால் பொத்திக்கொள்வார். நாளுக்கு நாள் குப்பை பெருகியது. ஒவ்வொருவரும் விதவிதமான குப்பைகளைப் போட்டனர். எல்லாம் சேர்ந்து துர்நாற்றம் எழும்பியது.

photo: pixabay.com

தன் மனைவி கொடுக்கும் பணியை செய்வதில் திருப்தி கண்டார். வீட்டுக்குள் நாற்றம் இல்லை. ஆனால். வீடு திரும்பும் போதெல்லாம் உடலெல்லாம் குப்பை மேட்டின் அழுகிய நாற்றம் தன் உடலில் வீசுவதாகத் தோன்றிக் கொண்டே இருக்கும். துணிகளை துவைத்து, சோப்புப் போட்டுக் குளித்தாலும் மூக்கில் குப்பை மேட்டின் நாற்றம்.

ஊர் சுத்தம் இல்லையேல் வாசனைத்திரவியத்தின் மணம் வீசும் அறைக்குள் இருந்தாலும், மூக்கில் ஒட்டிய ஊர் நாற்றம் விலகாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்