வீடு தொடங்கி கல்லூரி வரை தொலைவு ஏதோ ஒரு கிலோமீட்டர் தான். ஆனால், அவ்வளவு தூரம் கடப்பது என்பது எளிதல்ல. ஆண்பிள்ளைகள் எளிதாய்க் கடந்து விடுகின்றனர். எல்லாரும் ஒரே வகுப்புதான். ஊரும் ஒரே ஊர் தான். ஆனால், பெண்பிள்ளைகளின் பயணம் அவ்வளவு எளிதல்ல. சமூகக் கட்டமைப்புகள், ஒழுங்குசார் விதிமுறைகள், சமூக வரையறைகள், பலர் துடைத்தும் நீங்கா பெண் உடல் சார்ந்த சொல்லாடல்களும் பார்வைகளும் இன்றும் வழியெங்கும் முட்களாகவும், துப்பாக்கிகளாகவும், அரிவாட்களாகவும் அச்சமூட்டிக் கொண்டு கோரப்பற்களை காட்டியபடி நிற்கின்றன. எடுத்துவைக்கும் ஒவ்வொரு சுவடுகளின் கீழும் கண்ணிவெடிகள் புதைந்து கிடக்கும் நினைப்பு நெஞ்சில் நிழலாடுகின்றது.
சுவடுகள் ஏதோ இரத்தம் தோய்ந்ததாய் அன்றாடம் மாறுகின்றன. இரத்தம் கசிந்த வடுக்கள் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் என்பதே முடிவிலா வலி. என்று தீரும் இந்த அடிமைத்தனம். என்று நனவாகும்? இந்தச் சுதந்திரக்கனவ?
0 கருத்துகள்