விதைகளை போட்டுச் செல்தல் சுலபமல்ல
அதன் வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் தொடர்கின்றன
பழங்கள் சேகரிக்க மாற்றான் வருவான் என்னும் பொறாமைகளும்
அதற்கென தனி வரம் வேண்டும்
விதை விதைத்தலை மட்டுமே கடமையெனக் கொள்ள
நான் நட்ட மரத்திலிருந்து நான் கனி உண்ண வேண்டும்
அத்துமீறும் ஆசை விதைப்பதைத் தடுக்கின்றது
ஞானம் வேண்டும் கடந்த-நிகழ்-எதிர் காலங்களின்
கண்ணியாக மட்டுமே நான் உள்ளேன் என்பதை ஏற்க
அகண்ட அண்டத்தின் சிறு அணு மட்டுமே நான்
ஏற்றல் நன்று மறத்தல் கெடுதியே
மறக்கிறேன் எளிதில்
நான் உண்பவை
நான் விதைத்தவை அல்ல என்பதை தந்திரபூர்வம்
மறக்கிறேன் நான் விதைப்பவள் மட்டுமே என்பதை
photo: Pixabay.com
0 கருத்துகள்