வீழ்ந்தே கிடந்தேன் இயேசுவே | அ. சந்தோஷ்



வீழ்ந்தே கிடந்தேன் இயேசுவே
தனிமையின் வலியிலே
துடைத்தாய் கண்ணீர்
திவலைகள் இயேசுவே
சாய்ந்தேன் மார்பினில் தாயென

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

உழைப்பாலே கரடான கைகளினால்
தாங்கியே பிடித்திடும் தந்தை போலவே
வலியின் வடுக்கள் நீங்கவே வருடினாய்
கண்ணீர் காய்ந்திட

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

உன் அருகினிலே இயேசுவே
தணிந்தன தனிமைகள்
உன் உறவின் அணைப்பிலே இயேசுவே
சரிந்தேன் உன் மார்பினிலே

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

அழகின் உருவாய் தோன்றியே
உயிரை ஏந்துவாய் அன்பிலே
காயம் போக இறகால் வருடுவாய்
உள்ளம் விரும்பும் உறவின் இசைகள்
மீட்டுவாய் ஓஹோ ... உடலின் நரம்புகள் சிலிர்த்திட 

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

கருத்துரையிடுக

0 கருத்துகள்