அன்பென வந்தாள் | அ. சந்தோஷ்

 


அன்பென வந்தாள் மரியா தேற்றிடும் தாயாய்
துயரும் தீங்கும் நீங்கிட அணைத்தாள்
அன்னை மரியின் அணைப்பினில் நெகிழ்ந்தேன் மகிழ்வில்
கண்ணீர் கதைகள் பரிவுடன் கேட்டாள்

நீங்கா பாசம் அருள்வாள் நிதமும்
என்னே இனிமை தாயவள் நேசம்
கொட்டும் மழையாய் நனைக்கும் ஸ்பரிசம்
என்னே புதுமை தாயவள் வாசம்

மாசறு உடல்பெற்றவள் புவிமீதினில் பிறந்தாளே
மாசிலா இகவாழ்வதன் முன்மாதிரி ஆனாளே
உலகினரின் கறைபோக்கும் இறைமகனின் தாய் மரியே
பரிந்துரைகள் புரிந்திடுவாய் பாவிகள் விண் செல்ல

கறைபடி மனஇருளினில் வெண்பனியென பொழிவாயே
அகம் புறம் கறைபோக்கிடும் விண்மழையென வருவாயே
மாமரியே மாதவமே மாந்தரை காக்கும் தாயே
இறைபதம் யாம் அடைந்திடவே உறைவாய் சாவின் தருணம்

நீங்கா பாசம் அருள்வாள் நிதமும்
என்னே இனிமை தாயவள் நேசம்
கொட்டும் மழையாய் நனைக்கும் ஸ்பரிசம்
என்னே புதுமை தாயவள் வாசம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்