வெண்பனி மலராய் | அ. சந்தோஷ்

வெண்பனி மலராய் நறுமணம் கமழும் முகிழாய் விடியலின் பூவாய் மலர்ந்தாள் மரியும் வேந்தரின் தாயாய் தீதிலா திகட்டா எழிலாய் வாஞ்சையின் அன்னை பிறந்தாள் மண்ணில்

வருடும் கரங்கள் தீங்கை போக்கும் நீவும் நினைவில் நெஞ்சும் சுரக்கும் விண்ணின் தாயே உம்பதம் வந்தோம் விலகாதென்றும் அணைத்தே காப்பாய்

அகமதில் அருள்புகுந்திட அழகொளியினில் மிளிர்ந்தாயே இருள்சூழ்ந்திடும் உலகினில் வீண்மீனென உதித்தாயே தாய் மரியே அன்புருவே தவழ்ந்திட தாய்மடி நீயே அணைத்தருள்வாய் காத்தருள்வாய் தழுவிடும் கரத்தால் நிதமும்

கருவினில் இறைமகனவர் உடல்பூண்டிட தந்தாயே அருள்நதியென மகிழ்வினில் பிறரன்பால் நிறைந்தாயே தாய் மரியே அன்புருவே தவழ்ந்திட தாய்மடி நீயே அணைத்தருள்வாய் காத்தருள்வாய் தழுவிடும் கரத்தால் நிதமும்




கருத்துரையிடுக

0 கருத்துகள்