தவறு நடந்து விட்டது. மன்னிப்புக் கேட்பதற்காக. அவன் அண்ணனிடம் சென்றான். அண்ணனின் மனதில் தீராத காயங்கள். அவற்றிற்கு அண்ணியின் சீண்டல்கள் வலி கூட்டி, கொடிய வார்த்தைகளால் ரணம் ஆறாதபடி பார்த்துக் கொண்டன. ஆகையால் மன்னிப்பு கேட்டு உறவை சரிசெய்து மன நிம்மதியுடன் திரும்பலாம் என்னும் ஆசை வீட்டின் வாசலில் அவன் முகத்தைப் பார்த்ததும் அண்ணியார் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஒரு வழியாக அண்ணன் பேசத் தொடங்கினான். இவன் மன்னிப்புக் கேட்டான். அண்ணன் தனது வருத்தங்களை தெரிவிக்கத் தொடங்கினான். பழைய கதைகளை ஒன்றுவிடமால் ஒப்புவித்தான். குடும்பத்திற்காக அவன் செய்த தியாகங்கள், தம்பியாகிய அவனுக்காக செய்தவை அனைத்தையும் கூறினான். இவன் மன்னிப்புக் கேட்டான். சரி பரவாயில்ல எல்லாம் மறந்திட்டு சந்தோஷமா இருக்கலாம் என்று கூறிவிட்டு, ஆனாலும்... என்று ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, திரும்பவும் பழைய கதைகளைக் தொடக்கத்திலிருந்து கூற ஆரம்பித்தான் அண்ணன். இவன் மறுபடியும் மன்னிப்பு கேட்டான். அவன் சரி என்று கூறினான்... ஆனாலும்... என்னு இழுப்பு மீண்டும் தொடர்ந்தது. அதுவே தொடர்கதையானது. மன்னிப்பு நடக்கவில்லை. மனம் குழம்பி வீடு திரும்பினான்.
மன்னிக்க மனமில்லையா? இல்லை இயலவில்லையா? மன்னிப்பு எளிதல்ல... நிறையவே சுயவிமர்சனம் தேவை... அத்தோடு கடவுளின் கிருபையும்.
0 கருத்துகள்