தலை(...)ப்பட்ட ஸ்நாபக அருளப்பர் | அ. சந்தோஷ்

 லயத்தில் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அது கடைசி நாள். மாலை நேர சிறப்பு நிகழ்ச்சியுடன் திருவிழா முடியும் என்பது ஏற்பாடு. ஆலய ஆண்கள் சேர்ந்து நாடகம் ஒன்றை அரங்கேற்றத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்பாவும் அதில் பங்கேற்கிறார் என்பது அவரது மகனாகிய எனக்கு கவுரவமாகத் தான் இருந்தது. நாடகத்தின் பெயர் ஸ்நாபக அருளப்பர்.

ஆலய வளகாத்தில் நடகத்திற்கென பெரிய மேடை அமைத்திருந்தார்கள். பச்சை கமுகு மரங்களை வெட்டிவந்துதூண்களாக நிறுத்திஓலை வேய்வதற்கு வசதியாக குறியது நெடியது என பிளந்த கமுகின் துண்டுகள் சரியான அளவில்கட்டி தென்னை ஓலையால் கூரை வேய்ந்த மேடை. மக்கள் இருக்கும் தளத்திலிருந்து 2.5 அடி உயரத்தில் பலகை   பரப்பி நாடகம் அமைப்பதற்கான தளமும் அமைக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி பகுதியிலிருந்து அர்மோனியம் வாசிக்கவும் பாட்டுகள் பாடவும் ஆட்கள் வந்திருந்தார்கள். சலோமியாகவும் ஏரோதியாகவும் நடிக்கப் பெண்கள் இருவர் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார்கள். எங்கள் ஊர் பெண்கள் அனுபவிக்காத பெண் உரிமையை அவர்கள் அனுபவித்திருந்தார்கள் என்பது இன்று எண்ணிப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. மேடையில் மின்விளக்குகள் விதவிதமாக அமைக்கப்பட்டிருந்தன.

மூன்று எச்சரிக்கை மணிகளுக்குப் பிறகு நாடகம் தொடங்கியது. ஏரோதும் ஏரோதியாவும் காதல் வயப்பட சிறப்பு மேடை அமைப்புகள் செய்யப்பட்டிருந்தன. பாடலுக்கிடையே பத்து முறையாவது அரங்கை மாற்றி அமைகத்தார்கள். ஒரு அமைப்பிலிருந்து இன்னொன்றிற்கு மாறுவதற்காக ஓரிரு நிமிடங்கள் மட்டுமே எடுத்தார்கள். அவ்வேளையில் ஒளி அணைக்கப்படும். சலோமி ஏரோதை தனது நடனத்தால் மயக்குவதற்காகவும் ஒரு நடனக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆக இருப் பெண்களும் ஆளுக்கு ஒரு நடனம் ஆடியாக வேண்டும். இல்லையென்றால் அவர்களை பணம் செலவழித்து அழைத்து வருவதில் அர்த்தமில்லை. பார்வையாளர்களும் ஏமாந்து போவார்கள். ஏரோதுவும் அமைச்சர்களும் விருந்துண்டு களித்திருக்கும் காட்சிகள் ராஜ கம்பீரத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுஆடை அலங்காரங்கள் எல்லாம் கச்சிதமாக செய்யப்பட்டிருந்தது. பல்வேறு வகையான மதுக்கோப்பைகள்குவளைகள்பூக்கள் என அக்காட்சி பார்ப்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் செய்யப்பட்டிருந்தது. ஸ்நாபக அருளப்பரை (திருமுழுக்கு யோவான்) கைது செய்து சிறையில் அடைக்கும் தருணம்மக்கள் ஏரோதியா மீது காறி உமிழும் அளவிற்கு வெறுப்பை உணர்த்தும் வகையில் காட்சி அமைப்பும் வசனங்களும் விளக்குகளும் அர்மோனிய இசையும் சரியான விகிதத்தில் கோர்க்கப்பட்டது. சிறையில் இருந்தவாறு அருளப்பர் கரச்சிக்கும் போதுமக்கள் மனதில் நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்தது. மாற்றான் பெண்ணை ஏற்றிருக்கும் ஏரோதை அழிக்க கடவுள் பிரத்யேகமாக சக்தியை வெளிப்படுத்த மக்கள் காத்திருந்தனர். ஏரோதியா தோன்றிய காட்சிகளில்அவளின் அழகை விட உள் மனதின் வக்கிரம் மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி இறங்கச் செய்ய உரையாடல்களும் இசையும் மனங்களில் திணிக்கப்பட்டன.


photo: pixabay.com

நாடகத்தின் உச்சமாக ஸநாபகரின் தலைவெட்டும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. விளக்குகள்ஹர்மோனியத்தின் அழுகுரல்அத்தோடு சேர்ந்து பாடுபவரின் வித்தியாசமான குரல்கள் என அதிபயங்கர கொடூரத்தை காட்சி கொண்டிருந்தது. தலை தெறித்து விழுவதும்இரத்தம் தெறிப்பதும் எல்லாம் பிசிறுகளின்றி அரங்கேற்றப்பட்டது. தலைதெறித்து விழுந்த போது சிந்திய இரத்தம் மேடையின் முன்வரிசையில் இருந்தவர்களின் உடைகளிலும் பட்டது. அனைவரும் அதிபயங்கரமாய் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.

ஆலயத்தின் பங்குப்பணியாளர் இருந்த இடத்தில் சலசலப்புத் தொடங்கியது. ஆலய வளாகத்தில் கொலைகள் நடத்தக்கூடாது என்று அவர் பேசத் தொடங்கினார். அவரது குரலின் ஓசை அதிகரிக்கத் தொடங்கியது. அது எப்படி கொல்லலாம்? ஆலயமும் ஆலய வளாகமும் மக்கள் மனதில் நன்மையை விதைக்கும் இடங்கள்மனங்களை மென்மைப்படுத்தும் இடங்கள்வன்முறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய இடங்கள்இங்கு மன்னிப்புத்தான் விதைக்கப்பட வேண்டும்பொறுமையாய் செயல்பட பயிற்சி அளிக்கப்பட வேண்டும்கொலை செய்வதை மனித மனங்களில் காட்சிகளாக விளம்பக் கூடாது... அருட்தந்தையின் பேச்சில் பலர் குழம்பிப் போயினர்.

நாடகம் தானேஒரு நிகழ்வை காட்சிப் படுத்தும் போது அது நம்பும் வகையில் இருக்க வேண்டாமாயதார்த்தமற்ற நாடகம் எப்படி கலையாக இருக்க முடியும். நாடகம் உண்மையைத் தான் பேசியது. ஸ்நாபகர் கொல்லப்பட்டார் என்னும் விவிலியம் தெளிவாக சொல்கிறது. அந்தக் கொலைக் காட்சியை காட்டுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. பலர் வாதங்களை, குசுகுசுப்பாகவும், சிலர் சத்தமாகவும் பேசினர்.

பங்குப்பணியாளர் அதையெல்லாம் செவியில் வாங்குவதாய் இல்லை. இவ்விடம் எப்படி மனிதரைக் கொல்ல வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் இடம் அல்ல. மாறாகஎப்படி மனிதரையும் மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் பயிற்சி அளிக்க வேண்டிய இடம். வன்மம் மனங்களில் வன்மத்தை உருவாக்கும். ஒரு நல்ல செய்தியை கூறுவதற்காக வன்முறை காட்ட அவசியமில்லை. நல்லதொன்றிற்காக தீமையைப் பயன்படுத்தக் கூடாது. தீமையின் மார்கம் வழியாக நன்மையை போதிக்க முடியாது.

ஆலயமும் ஆலய வளாகமும் மென்மையை பயிற்சியாகக் கொடுக்க வேண்டும். நன்மையை விதைக்க வேண்டும். 
அருட்தந்தையின் விளக்கம் தொடர்ந்தவாறு இருந்தது. நாடக மேடை இடம் மாறிக்கொண்டிருந்தது. பங்குப்பணியாளர் மீது கவனம் குவியத் தொடங்கியிருந்தது. நாடகத்தின் ஆன்டி கிளைமாக்ஸ் (Anticlimax) இங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது

கருத்துரையிடுக

0 கருத்துகள்