நிராகரிப்பு | அ. சந்தோஷ்

 Nas Daily (நாஸ் டெய்லிஎன்னும் அன்றாட காணொளி பதிவை முகநூலில் ஒருவர் வெளியிட்டு வருகிறார். சுவாரஸ்யமான விஷயங்களை மிகுந்த நுணுக்கத்துடன் அவர் பதிவேற்றேம் செய்கிறார். இவர் பாலஸ்தீனர், பாலஸ்தீன் நாட்டினருக்கும் இஸ்ரேயல் நாட்டவருக்கும் இடையேயான பகை பல்லாண்டு காலத்தது. ஒருவர் மற்றவரை பகைவராக பார்க்கும் போக்கு பெருமளவில் உள்ளது. அது உலகளாவிய அரசியல் ஆதாயங்களுக்காக கனல் கெடாமல் தந்திரபூர்வமாக காக்கப்பட்டும் வரப்படுகிறது.

நாஸ் அவர்கள் எருசலேமில் யோர்தான் அருகில் தனது காணொளி தொகுப்புக்கான படிப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக யூதமதத்தில் பிடிப்பு மிக்க குடும்பம் ஒன்று வர நேர்ந்தது. அக்குடும்பத்தலைவர், நாஸ் அவர்களை விசித்தரமாகப் பார்த்தார். ஆச்சரியம் ததும்ப அவர் செய்யும் தொழிலைப் பற்றிய விசாரிப்புகள் தொடர்ந்தன. அவர் அரபு நாட்டவர் அதுவும் பாலஸ்தீன் நாட்டினர் என்றும் சொன்ன போது, யூத மதத்தினரால் அதை ஏற்க முடியவில்லை. நீபுத்திசாலியாக இருக்கிறாய், ஆனால் அரபினர் அப்படி புத்திசாலியாய் இல்லையே என்று கூறி அவர் அரபினர் என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் நாஸ் பிரெஞ்சு நாட்டவராய் இருப்பார் என்று நிர்பந்தமாய் கூறவும் செய்தார்.

யூதரின் 15 வயது நிரம்பிய மகள் கூட இருந்தார். அவர், பாலஸ்தீனர்கள் அனைவரும் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்று கூறி அதில் உறுதியாய் இருந்தார். இஸ்ரயேலரைக் கொல்வது அவர்கள் வேலை என்றும் கூறினார். பெரியவர்கள் தங்கள் இனவெறுப்பு மனநிலைகளுடன் இருப்பது வழக்கம். ஆனால், இளையோர்கள், அதுவும் படித்தவர்கள் அப்படி இருக்கத் தேவையில்லை. ஆனால் இப்பெண் வெறுப்பு மிக்கவராய் இருந்தார் என்பது நாஸ் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இன வெறுப்புகளாகவும் சாதி வெறுப்புகளாகவும் மொழி வெறுப்புகளாகவும் ஊக்குவிக்கப்படுபவை அப்பாவி மனிதர்களையும் பலி வாங்குகிறது என்பது உண்மை. இக்குழுவிடமிருந்து நன்மை எதவும் எதிர்பார்க்க முடியாது என்னும் முழுமைவாதம், வெறுப்பாய் வளரும் பட்சத்தில் அது பேராபத்துக்களை ஏற்படுத்துகிறது. அப்பாவிகள் அதில் சேர்க்கப்பட்டு நன்மைகள் அழிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகின்றன. ஓரிருவரின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாய் பெரிதாக்கப்பட்டு அதுவே ஒரு இனத்தின் அடையாளமாக மாற்றும் போக்கு ஆபத்தானது அபத்தமானது. அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி, வாழ்வோரும் உண்டு. மொழி, இனம், நிறம்  போன்ற காரணிகளால் தங்களை விட வித்தியாசமாக இருப்பவர்களை ஒதுக்கும் மனநிலை எல்லா மட்டங்களிலும் அதிக்கம் செலுத்துகிறது. பணமும் அதிகாரமும் படைத்தோர் தங்கள் ஆதிக்க எண்ண ஓட்டங்களை அரசியலாக்கி, வலுவிழந்தோரை நசுக்கிறார்கள் என்பதே உண்மை.

photo: pixabay.com

துணைக்கதை

நூலகத்தில் வைத்து அந்நபரை நான் சந்தித்தேன். இருவரும் ஒரே நாட்டினர், நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒத்த கருத்துடையோர் என்னும் பேச்சுக்களுடன் ஆரம்பமான அந்த உரையாடல். நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. பேச்சில் ஏராளமான தகவல்களை பரிமாறிக் கொண்டோம், படிப்பு சார்ந்த விஷயங்கள் தொடங்கி குடும்ப உறவுகள் வரை பல காரியங்கள் உரையாடலுக்கானப் பேச்சுக் பொருட்களாயின. அன்றைய தினம் இருவரும் சேர்ந்து ஓட்டலுக்கு சென்று சேர்ந்து உண்பது என தீர்மானமாயிற்று. இருமொழி பேசும் இருமாநிலத்தவர் என்னும் பேதங்கள் அங்கே முளைக்கவில்லை. அவருடைய மொழியை பேசுவதற்கு என்னால் இயல்பாய் கூடும் என்தால், கருத்துப் பரிமாற்றங்களில் எவ்வித சிக்கலும் எழவில்லை. நல்ல மனிதராய் இருந்தார். மனிதம் நிறைந்த நல்ல மனிதர். அப்போது, அவருடைய மாநிலத்தைச் சேர்ந்த இன்னொருவர் நுழைந்தார். அவர் தன்னை இருவருடனும் அறிமுகம் செய்து கொண்டார். அவர் என்னுடைய மாநிலத்தவர் அல்ல என்ற தகவல் பரிமாறப்பட்டதிலிருந்து, அவர் என்னிடம் பேச்சுக் கொடுப்பதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. என்னோடு பேசிக்கொண்டிருந்த அவரது மாநிலத்தவரோடு நன்றாக பேச ஆரம்பித்தார். அவர் என்னிடமிருந்து அவரை எப்படிப் பிரிக்கலாம் என்பதில் கவனம் செலுத்தினார். அவர் என் மாநிலத்தவரைப் அடையாளப்டுத்த பயன்படுத்திய மொழி காதில் நாராசமாய் நுழைந்தது. நான் விலகினேன்.

என்னோடு இயல்பாய் பேசினவர், செய்வதறியாது திகைத்தார். நான் பையைத் தூக்கிக் கொண்டு மதிய உணவுக்கு நேரமாயிற்று எனக் கூறி நூலகம் விட்டு வெளியேறினேன்.

மனிதம் தழைக்கப் பேசுவோம், உரையாடுவோம், உறவாடுவோம். சில இடங்களில் சில சந்தர்ப்பங்களில் நேரிடும் நிராகரிப்புகளைத் தாங்கிட நம்மிடம் வலுவில்லை.   


கருத்துரையிடுக

0 கருத்துகள்