ஏங்கும்
இதயம் வடிக்கும் கண்ணீர்
துடைக்கும் கரங்கள் உமதன்றோ
ஏழை இதயம் எழுப்பும் குரலை
கேட்கும் செவிகள் உமதன்றோ
தனிமை
தவிப்பும் பிரிவின் வலியும்
போக்கும் பிரசன்னம் உமதன்றோ
இடறும் பாதம் தவறும் போது
தாங்கும் கரமும் உமதன்றோ
நன்றும்
தீதும் அறியா முரணில்
அறிவின் சுடரும் நீரன்றோ
புரியா புதிராய் துன்பம் அணுக
நெஞ்சின் தஞ்சம் நீரன்றோ
தாயாய் தழுவும் உந்தன் கரமும்
இறைவா இறைவா உமதன்றோ
எந்தன்
இதயம் அறியும் இறைவா
என்னைத் தந்தேன் என்னை நானாக
நீங்கா அன்பாய் நிதமும் நடத்தும்
நட்பின் நெருக்கம் என்றும் நீரன்றோ
உணர்வில்
கலக்கும் உறவாய் நிதமும்
நினைவில் நிலைப்பாய் நெஞ்சம் நெகிழ
காயம் ஆறும் நீங்கும் நெருடல்
நேர்மை உறவில் நெஞ்சம் மகிழும்
உறவை
முறிக்கும் சிந்தை எழவே
இதயம் சுருங்க உறவை வெறுத்தேன்
பெரிதாம் அன்பால் உலகைக் காக்கும்
உறவின் தலைவா இதயம் உறைவாய்
முகிழும்
உறவால் வலிகள் தணியும்
தவழும் இதயம் உறவின் நெகிழ்வில்
உலகின் தந்தாய் கனிவின் விழியால்
பிள்ளை என்னை உயிராய்க் காப்பாய்
Yenkum Idayam Vadikkum Kanneer
Thudaikkum Karangal Umathantro
Yezhai Idayam Ezhuppum Kuralai
Kedkum Chevikal Umathantro
Thanimai Thavippum Pirivin Valiyum
Pokkum Prasannam Umathntro
Idarum Paatham Thavarum pothu
Thaankum Karamum Umathantro
Nantrum theedum Ariya Muranil
Arivin Sudarum Neerantro
Puriya Puthirai Thunpam anuka
Nenjin Thanjam Neerantro
Thayai Thazhuvum Unthan Karamum
Iraiva Iraiva Umathantro
Enthan Idayam Arium Iraiva
Ennai Thanthen Ennai Naanaha
Neenka Anpaai Nithamum Nadathum
Nadpin Nerukkam Entrum Neerantro
Unarvil Kalakkum Uravai nithamum
Ninaivil nilappai Nenjam Nehizha
Kaayam aarum Neenkum nerudal
nermai Uravil Nenjam mahizhum
Uravai murikkum sinthai ezhavae
Idayam surunka uravai veruthen
Perithaam anpaal ulahai kakkum
Uravin thalaiva Idayam Uraivai
Muhizhum Uravil valikal thanium
Thavazhum Idayam Uravin Nehizhvil
Ulahin thanthaai kanivin vizhiyaal
Pillai Ennai Uyiraai kaappai
0 கருத்துகள்